கிணத்துக்கடவு பகுதியில் பொதுமக்களை துரத்தும் தெருநாய்கள்

கிணத்துக்கடவு பகுதியில் பொதுமக்களை துரத்தும் தெருநாய்கள்;

Update:2022-02-07 23:04 IST
கிணத்துக்கடவு

நாய்கள் நன்றி உள்ள விலங்குதான்.... ஆனால் அதே நாய்கள் தெரியாத நபர்களை கடித்து குதறும் பழக்கமும் கொண்டவை. தற்போது தெருக்களில் எங்கு பார்த்தாலும் கூட்டங்கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.

 இதற்கு காரணம் அதன் பெருக்கம் அதிகரிப்புதான். இதில் கிணத்துக்கடவு பகுதியும் விதிவிலக்கு அல்ல. இங்குள்ள வீதிகள் மற்றும் கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் கூட்டங்கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன. 

திடீரென்று ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளும் நாய்கள், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீதும் பாய்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

கிணத்துக்கடவு பகுதியில் தற்போது தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. சாலையில் தாறுமாறாக ஓடுகிறது.  கிணத்துக்கடவு அருகே சாலையின் குறுக்கே பாய்ந்த தால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் அதன் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சாலையில் தனியாக நடந்து செல்பவர்களையும் துரத்தி கடிக்கிறது. 

எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்