பொள்ளாச்சி அருகே காய்கறி வியாபாரியிடம் ரூ4 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் காய்கறி வியாபாரியிடம் இருந்து ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2022-02-07 23:08 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் காய்கறி வியாபாரியிடம் இருந்து ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பறக்கும்படையினர் கண்காணிப்பு

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள பறக்கும்படை யினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள மோதிராபுரம் பகுதியில் துணை தாசில்தார் காயத்ரி தலைமையில் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.4 லட்சம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த மோட்டார் சைக்கிளில் உள்ள கவரில் ரூ.4 லட்சம் இருந்தது. உடனே அதில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர், சூளேஸ்வரன்பட்டி மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 47) என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. 

உடனே அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டனர். அவரிடம் ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பின்னர் அந்த பணம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்