நெகமம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் 8 பேர் போட்டியின்றி தேர்வு
நெகமம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் 8 பேர் போட்டியின்றி தேர்வு;
நெகமம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் சுயேச்சையை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
. இந்த நிலையில் 9 வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெற்றனர்.
இதனால் தி.மு.க.வை சேர்ந்த 8 வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேச்சை என 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி 3-வது வார்டில் எம்.பிரியா, 6-ஜெ.பரமேஸ்வரி, 7-என்.தேவிகா, 8-கே.நந்தவேல்முருகன், 11-ஆர்.கஸ்தூரி, 12-டி.கலைமணி, 14-ப.நாகராஜ் 15-ஆர்.சபரீஸ்வரன் என 8 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களும், 9-வது வார்டில் ஆர்.ரவி என்ற சுயேச்சை வேட்பாளரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
எனவே மீதம் உள்ள 1, 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளுக்கு மட்டுமே வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.