தப்பி ஓடிய 2 சிறுவர்கள் பிடிபட்டனர்

தப்பி ஓடிய 2 சிறுவர்கள் பிடிபட்டனர்;

Update:2022-02-09 22:39 IST
தப்பி ஓடிய 2 சிறுவர்கள் பிடிபட்டனர்
கோவை

கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே சிறுவர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்ற வழக்குகளில் கைதாகும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைக்கப்படுகிறார்கள். அங்கு அடைக்கப்பட்டு உள்ள சிறுவர்கள் இதுவரை 6 முறை தப்பிச்சென்று பிடிபட்டு உள்ளனர். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள வார்டனை தாக்கி விட்டு மதுரையை சேர்ந்த 17 வயது சிறுவன், திருப்பூரை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் 3 பேரும் நகைபறிப்பு வழக்கில் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று திருப்பூர் பகுதியில் 17 வயது சிறுவர்கள் 2 பேர் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை கொண்டு வரப்பட்டனர். 14 வயது சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்