பெட்டிக்கடையில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது

பெட்டிக்கடையில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது;

Update:2022-02-09 22:48 IST
பெட்டிக்கடையில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது
கோவை

கோவை சிங்காநல்லூர் அம்மன் நகரை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 28). இவர் வரதராஜபுரம் நீலிகோணாம்பாளையம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கம்போல வியாபாரத்தை முடித்துகொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் இருந்த ரூ.5,200 பணத்தை காணவில்லை. நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தீபக்குமார் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியது கோவை உப்பிலிபாளையம் மற்றும் சிவானந்த காலனியை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்  2 பேரையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்