பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு
தென்காசி மாவட்ட கலெக்டரை கண்டித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
பொள்ளாச்சி
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தர்ராஜை கண்டித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில் தென்காசி மாவட்ட கலெக்டர் வருவாய் துறை அலுவலர்கள் மட்டுமின்றி அனைத்து துறை அலுவலர்களை தரக்குறைவான வார்த்தைகளால் அவமானம் செய்வது, கூகுள் மீட் என்ற பெயரில் அரசு அலுவலர்களை நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசி மனஉளைச்சல் ஏற்படுத்துவது, பொதுமக்கள் சுதந்திர போராட்ட வீரர்கள், அரசு உயர் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்க மற்றும் கோரிக்கை மனுக்களை பெற மறுப்பது, ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுப்பது மற்றும் அரசு ஊழியர்களை கொத்தடிமைகள் போன்று நடத்தும் கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு நிலவியது.