வ.உ.சி. உயிரியல் பூங்காவில் இறந்த மான்குட்டியின் உடலை கொத்தி தின்ற காகங்கள்

வஉசி உயிரியல் பூங்காவில் இறந்த மான்குட்டியின் உடலை கொத்தி தின்ற காகங்கள்;

Update:2022-02-13 22:31 IST
கோவை

கோவை மாநகரின் மையப்பகுதியில், வ.உ.சி. உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. கோவை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் போதிய இடவசதி இல்லை, பூங்கா பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் தொய்வு உள்ளதாக கூறி,கடந்த மாதம் 5-ந் தேதி வ.உ.சி. உயிரியல் பூங்காவிற்கான அனுமதியை மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் ரத்து செய்தது.

இதை தொடர்ந்து கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் பூங்கா நிர்வாகம்  ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வ.உ.சி. உயிரியல் பூங்கா வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்த மான்குட்டி திடீரென இறந்தது. இதையடுத்து பூங்கா நிர்வாகத்தினர் அந்த மான்குட்டியின் உடலை அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டுவிட்டதாக தெரிகிறது. 

இதனால் காகங்கள் உள்ளிட்ட பறவைகள் மான் குட்டியின் உடலை கொத்தி தின்றன. இதுதொடர்பாக படம் வெளியானது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வ.உ.சி. உயிரியல் பூங்காவில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. எனவே 

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தரப்பில் கூறுகையில், குறை பிரசவம் என்பதால் மான் குட்டி இழந்த நிலையில் பிறந்தது. மான்குட்டியின் உடல் மரத்தின் அருகில் ஓரமாக இருந்ததால் உடனடியாக தெரியவில்லை. அதன்பின்னர் மான்குட்டியின் உடல் அகற்றப்பட்டது என்றனர். 

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறும்போது, கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் மான்குட்டி இறந்தது தொடர்பாகவும், அதன் உடலை அப்புறப்படுத்தாதது குறித்தும் விளக்கம் அளிக்க பூங்கா ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் பூங்கா இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்