கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை ஒட்டிச் சென்ற போதை ஆசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை ஒட்டிச் சென்ற போதை ஆசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது;
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை ஒட்டிச் சென்ற போதை ஆசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து விபத்து
கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று மதியம் 108 ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக புறப்பட்டது. அது லங்கா கார்னர் பாலத்தை கடந்து குட் செட் ரோட்டில் வேகமாக திரும்ப முயன்றது.
அப்போது அங்கு நின்ற போக்குவரத்து போலீசார், நோயாளியை மீட்க செல்வ தாக நினைத்து ‘நோ என்ட்ரி’ பகுதியில் ஆம்புலன்ஸ் அனுமதித்தார்.
ஆனால் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் எதிரே கணுவாய் பகுதியில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி சென்ற அரசு டவுன்பஸ் மீது மோதியது.
அதன்பிறகு கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போதை ஆசாமி
இதை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள், உடனே ஆம்புலன்சை ஓட்டி வந்தவரை மடக்கி பிடித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரித்தும் அவர் எந்த தகவலையும் கூற வில்லை.
இதையடுத்து அவர் தனது பெயர் திலகர் (வயது25) என்று இந்தி மொழியில் கூறினார். அவர், கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமை யாகி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
அவரின் தலையில் காயம் இருந்ததால் வார்டில் சிகிச்சையில் இருந்தார்.
வழக்கு பதிவு
இந்த நிலையில் அவர் அரசுஆஸ்பத்திரி வளாகத்தில் நின்ற ஆம்புலன்சை பார்த்து உள்ளார். அந்த ஆம்புலன்சில் சாவியும் இருந்து உள்ளது.
ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஊழியர் நோயாளியு டன் வார்டிற்குள் சென்று இருந்தனர்.
இதனால் திலகர் திடீரென்று அந்த ஆம்புலன்சை ஓட்டிக் கொண்டு வேகமாக சென்ற போது அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
இது குறித்து திலகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசார ணையில், போதை பழக்கம் காரணமாக திலகருக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.