வீடு, வீடாக நோட்டீஸ் வினியோகித்த அ.தி.மு.க. வேட்பாளர்
வீடு, வீடாக நோட்டீஸ் வினியோகித்த அ.தி.மு.க. வேட்பாளர்;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 26-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக பழனிக்குமார் என்பவர் போட்டியிட்டார். இந்த வார்டு தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் வேட்பாளர் சாந்தலிங்கம் என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிக்குமார் வார்டுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்பதால் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது.
ஆனால் 13 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிக்குமார் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் ‘உண்மை, உழைப்பு தோற்று விட்டது. எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி’ என்று நோட்டீஸ் அச்சடித்து கொண்டு வார்டுக்கு சென்றார். அங்கு வீடு, வீடாக பொதுமக்களை சந்தித்து அந்த நோட்டீசை வழங்கினார்.