பெண்ணிடம் நகை பறித்த நபர் போலீசில் ஒப்படைப்பு
பெண்ணிடம் நகை பறித்த நபரை செங்கல்பட்டு போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.;
செங்கல்பட்டு கோகுலாபுரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் அம்மு (வயது 28). இவர் நேற்று பகல் 12 மணி அளவில் தனது வீட்டின் அருகே இருந்த கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் அம்மு அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தப்பியோடிய மர்ம நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து செங்கல்பட்டு டவுன் போஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் தயா என்கிற தயாநிதி(27) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.