வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
வீட்டில் 7 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது அரசனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 43). இவர் சிவகங்கை அருகே கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகி றார். இவரது வீட்டு கதவு உடைத்து பீரோவில் 6¾ பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக் கண்ணன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.