தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2022-02-25 23:44 IST
திருச்சி
பூங்கா திறக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், காஜாப்பேட்டை மெயின் ரோட்டில் ரெங்கசாமி பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பயன்பாடற்ற நிலையில் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த பூங்காவை திறக்க வேண்டும் அல்லது அந்த இடத்தில் நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
ஆபேல் குணசீலன் , அரியமங்கலம், திருச்சி.

வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு தெற்கு தெருவில் பொது குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் இந்த பொது குடிநீர் குழாயில் துணிகள் துவைப்பதும், வீட்டில் உள்ள பாத்திரங்களையும் கழுவி வருகின்றனர். இதனால் அதிகமான குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், லால்குடி, திருச்சி. 

சேதமடைந்த மின்கம்பங்கள்
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை ஊராட்சி பழங்காவேரி 3-வது வார்டு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தானதாக உள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்வராஜ், பெட்டவாய்த்தலை, திருச்சி.

மேலும் செய்திகள்