நெல்லை: ரேஷன் அரிசி பறிமுதல்
900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;
நெல்லை:
நெல்லை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேஷ்வரன் மற்றும் போலீசார் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பாளையம் குலவணிகர்புரம் பாண்டித்துரை 2-வது தெருவில் சுமார் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கீழநத்தம் மணப்படை வீட்டை சேர்ந்த நல்லகண்ணு மகன் பிரான்சிஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.