வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவர் கதிர்வேல் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றது தொடர்பாக டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவுக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, விஜய் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் விஜயிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.