ஊட்டச்சத்து உணவு திருவிழா

சிவகாசி அருகே ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.;

Update:2022-02-28 00:42 IST
சிவகாசி,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனைக்குட்டம் பஞ்சாயத்தில் பாரம்பரிய இயற்கை ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. 
சமூக சுய உதவிக்குழு பயிற்றுனர் லட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். முருகஜோதி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 20 பல்வேறு வகையான ஊட்டசத்து உணவு பொருட்களை தயாரித்து காட்சிபடுத்தி இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 435 பேர் உணவு வகைகளை ருசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரமணி, பிச்சையம்மாள், ராமலட்சுமி, பானுமதி ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்