தேசிய அறிவியல் தின கண்காட்சி

நீடாமங்கலம் அருகே தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடந்தது.

Update: 2022-03-01 18:30 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கல்லூரி முதல்வர் வேலாயுதம் மற்றும் இணை பேராசிரியர் ஆனந்தராஜா ஆகியோரின் ஆலோசனையின்படி கண்காட்சி நடத்தினர். 

இந்த கண்காட்சியில் விதைகள் மற்றும் நுண்ணுயிர் உரங்களை காட்சிப்படுத்தினர். இதில் பாரம்பரிய நெல் ரகங்கள், தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறி விதைகள் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

இதை விவசாயிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பார்வையிட்டனர். மேலும் நுண்ணுயிர் உரங்களின் நன்மைகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துக்கூறினர்.

மேலும் செய்திகள்