2 மாணவர்கள் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
2 மாணவர்கள் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு;
கோவை
கோவை நியூசித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட்டை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. ஐ.டி. படித்து வருகிறார். அவருடன் படிக்கும் நண்பர் ஒருவரை அதே கல்லூரியில் படித்து வரும் மூத்த மாணவர்கள் சிலர் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு இருந்துள்ளது.சம்பவத்தன்று சந்தோஷ்குமார், நண்பர் கார்த்திகேயனுடன் கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். ராமநாதபுரம் ஆல்வின்நகர ரோட்டில் செல்லும்போது, அவர்களை கல்லூரியில் படிக்கும் ராக்கிங் செய்த கும்பல் கார்த்திகேயனை தாக்கியதுடன், இரும்பு கம்பியால் சந்தோஷ்குமாரை தாக்கி மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
தாக்குதலில் காயம் அடைந்த சந்தோஷ்குமார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் கல்லூரி மாணவர்கள் உசேன், ஜாகீர், பென்னி, பிரமோத் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.