முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2022-03-03 15:51 IST
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், மூங்கில் ஏரியை சேர்ந்தவர் சரண்யா(வயது 30). இவர், சில நாட்களுக்கு முன்பு சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், “நான், வினோத்(30) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன். எங்களுக்கு 7 வயதில் சாய்ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் 3 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகிறோம். எனது கணவர் வினோத், எனக்கு தெரியாமல், பெங்களூருவை சேர்ந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டதாக வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்