செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடர் குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க செங்கல்பட்டு டவுன் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போலீசார் பச்சையம்மன் கோவில் மலையடிவாரத்தில் பகுதிக்கு சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் 3 பேர் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைத்த போலீசார் தப்பி ஓடியவர்களை விரட்டி சென்றனர். அதில் 2 பேர் பிடிப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 19) என்பதும் மற்றொருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் (19) என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர் தப்பி ஓடிய நரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.