அகலப்படுத்தும் பணிக்காக கோதவாடி குளக்கரையில் டிரான்ஸ்பார்மர் அகற்றம்

அகலப்படுத்தும் பணிக்காக கோதவாடி குளக்கரையில் டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டது.;

Update:2022-03-04 23:14 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் கோதவாடி குளம் உள்ளது. 152 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் உள்ள முட்புதற்களை கோதவாடிகுளம் பாதுகாப்பு அமைப்பு, விவசாயி கள், பொதுமக்கள் அகற்றினார்கள். 

தற்போது குளத்தில் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் 910 மீட்டர் நீளம் கொண்ட குளக் கரையை 36 அடி அகலமாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. அங்கு டிரான்ஸ்பார்மர் இருந்ததால் பணிகள் தடை பட்டது. 

இந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற கோரிக்கை விடுக்கப் பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் கோதவாடி குளக்கரையில் இருந்த டிரான்ஸ்பார்மரை கிரேன் மூலம் அகற்றி வேறு இடத்தில் வைத்தனர். 

இதற்கு உரிய நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துறை அமைச்சருக்கு குளம் பாதுகாப்பு அமைப்பினர் நன்றி தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்