தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

செங்கல்பட்டு நகரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரி அபராதம் விதித்து எச்சரித்து சென்றனர்.;

Update:2022-03-07 20:06 IST
செங்கல்பட்டு நகரத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு கோர்ட்டு அருகே உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதா, காட்டாங்கொளத்தூர் மண்டல ஆய்வாளர் மணிமாறன் மற்றும் செங்கல்பட்டு நகர உணவுப்பொருள் பாதுகாப்பு ஆய்வாளர் துரை ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் பிளாஸ்டிக் உபயோகம் உள்ளதா? டீத்தூளில் கலப்படம் உள்ளதா? விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் காலாவதி ஆனதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து சென்றனர்.

மேலும் செய்திகள்