காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலி
காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தார்.;
காஞ்சீபுரம் அருகே பழைய இலுப்பப்பட்டு, ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). லாரி டிரைவர். இவர் தனது மகன் தர்ஷனை (8) மோட்டார்சைக்கிளில் அழைத்து கொண்டு, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தர்ஷன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து உயிரிழந்த ரமேஷின் மனைவி நித்யா காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.