கோவையில் மகளிர் தின விழாவையொட்டி பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர்
கோவையில் மகளிர் தின விழாவையொட்டி பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர்;
கோவை
கோவையில் மகளிர் தின விழாவையொட்டி பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மகளிர் தினம்
ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், ஆகியோர் கலெக்டர் அலுவலக பெண் பணியாளர்க ளுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.
அப்போது கலெக்டர் சமீரன் மற்றும் அதிகாரிகள் பெண் பணியாளர்களுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு மேயர் கல்பனா, மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர், மாநில மற்றும் தேசிய சிலம்ப போட்டியில் பதக்கம் வென்ற அந்த பள்ளி மாணவிகள் சபிதா, தாரணி ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அதோடு பள்ளி மாணவிக ளுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் உள்பட பொருட்களை வழங்கினார்.
இதில் துணை மேயர் வெற்றி செல்வன், மாநகர கல்வி அலுவலர் பாண்டிய ராஜசேகர், நகர்நல அலுவலர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆட்டோ டிரைவருக்கு விருது
கோவை அரசு கலைக் கல்லூரியில் நடந்த பெண்கள் தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், பெண் ஆட்டோ டிரைவர் பாக்கியலட்சுமிக்கு விருது வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தி கோவை ரேஸ்கோர்சில் பேரணி நடைபெற்றது.
கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் முன்னிலையில் பெண் போலீசார் கேக் வெட்டி கொண்டாடி னர்.
கோவை- திருச்சி சாலை மத்திய தபால் அலுவலகத்தில் பெண்கள் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து பணிக்கு வந்து மகளிர் தினம் கொண்டாடினர்.
பெண்கள் தபால் நிலையம்
மகளிர் தினத்தையொட்டி கோவை வேளாண் பல்கலைக்கழக வளா கத்திற்குள் உள்ள தபால் அலுவலகத்தில் துணை தபால் அதிகாரி, 3 அஞ்சல் அலுவலர்கள், 3 தபால்காரர்கள், ஒரு ஊழியர், ஒரு துப்புர வாளர் என 9 பேரும் பெண்களே பணியில் இருக்கும் வகையில் மாற்றப்பட்டது.
ஏற்கனவே அங்கு பணியில் இருந்த ஒரு ஆண் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமூக வலைத்தளங் களிலும் பெண்களுக்கு பலர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.