தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை;
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தியது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் வரவேற்றார். முகாமின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பாலமுருகன் விளக்கவுரையாற்றினார்.
முகாமின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 21 தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 217 மாற்றுத்திறனாளி வேலைநாடுனர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வழங்கினார். முடிவில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவியாளர் கவிதா நன்றி கூறினார்.