கிரெடிட் கார்டு தொகையை உயர்த்தி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.86 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது

கிரெடிட் கார்டு தொகையை உயர்த்தி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.86 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது;

Update:2022-03-12 20:25 IST

கோவை

கிரெடிட் கார்டு தொகையை  உயர்த்தி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.86 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 57). தனியார் நிறுவன ஊழியர். 

இவருடைய கிரெடிட் கார்டின் உச்சவரம்பு தொகையை உயர்த்தி தருவதாக வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனில் கூறியுள்ளார். 

அதற்கு சதீஷ்  சம்மதித்தார். உடனே அந்த நபர், வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண் ஆகியவற்றை அனுப்புமாறு கூறினார்.

ரூ.86 ஆயிரம் மோசடி

அதன்படி சதீஷ், தனது கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள் மற்றும் செல்போனுக்கு 2 முறை வந்த ஓ.டி.பி. எண்களையும் அந்த நபரிடம் கூறினார்.

 அதன்பிறகு சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.86 ஆயிரத்து 369 எடுக்கப்பட்டு உள்ளதாக திடீரென்று குறுஞ்செய்தி வந்தது. 

 அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த  அவர் அந்த நபரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. 


இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்