காஞ்சீபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக போராடும் நிலை வரக்கூடாது; அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

காஞ்சீபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக போராடும் நிலை வரக்கூடாது என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.;

Update:2022-03-13 19:40 IST
காஞ்சீபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில் லட்ச கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடம் வீதிக்கு வந்து போராடுவது வழக்கமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாநகராட்சியில் திருபார்கடல் ஆறு மற்றும் சாலபோகம் வேகவதி ஆற்று பகுதிகளில் காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காஞ்சீபுரம் மாநகராட்சியில் காலை மற்றும் மாலையில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். வரும் கோடை காலங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக போராடும் நிலை உருவாக கூடாது என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது துணை மேயர் குமரகுருநாதன் மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்