பொள்ளாச்சியில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு

பொள்ளாச்சியில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் பாதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்து உள்ளார்கள்.;

Update:2022-03-14 19:49 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் பாதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்து உள்ளார்கள். 

சைபர் கிரைம் குற்றங்கள் 

கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போன், இணையதளம் மூலம் குற்றங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதில் அதிகஅளவில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் பல்வேறு மோசடிகளில் நடக்கிறது. இதில் ஏராளமானோர் பல லட்சம் ரூபாயை இழுந்து உள்ளனர். அதனால் பொதுமக்கள் அனைவரும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- 

செல்போன் அழைப்புகளை கவனமாக...

சமூகவலைத்தளங்கள் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சமூக விரோதிகள் தங்களது தவறான பாதைக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். வேலைவாய்ப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
இந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் குறுக்கு வழியில் அரசு வேலை தேடும் பணியில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் இறங்குகின்றனர். சமூக வலைதள பக்கங்களில் ஆட்கள் தேவை என போலியாக விளம்பரம் செய்கின்றனர். இதை பார்த்து இளைஞர்கள் தொடர்பு கொள்கின்றனர். பதிவு கட்டணம் என தொடங்கி முடிந்தளவு பணத்தை பறித்து மோசடியில் ஈடுபடுகின்றனர். 
எனவே  தெரியாத எண்களில் இருந்து வரும் செல்போன் அழைப்புகளை கவனமாக கையாள வேண்டும். தகவல் பரிமாறக்கூடாது. மேலோட்டமாக பார்த்து செயல்படாமல் சிந்தித்து செயல்பட வேண்டும். மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்