கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் அவதி

கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் அவதி;

Update:2022-03-14 20:19 IST
கோவை

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதாவது அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வரை கோவை துணிவணிகர் சங்க மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 

இந்த நிலையில் அங்கு கடந்த 4-ந் தேதி முதல் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மேலும் இன்று உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடந்தது. இதில் கலந்துகொள்ள காலை 9 மணிக்கு ஆசிரியர்கள் வந்தனர். ஆனால் இணையதள பிரச்சினை காரணமாக மதியம் 1.40 மணிக்குதான் கலந்தாய்வு தொடங்கியது. இதனால் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த கலந்தாய்வில் மொத்தம் 98 பேர் பங்கேற்றனர். நாளை(செவ்வாய்க்கிழமை) மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

மேலும் செய்திகள்