ரெயில்வே பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்;

Update:2022-03-14 20:19 IST
கோவை

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அறிவிக்கபட்டு உள்ளதால் அந்த திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி எஸ்.ஆர்.எம்.யு. மற்றும் ஏ.ஐ.ஆர்.எப்‌. ரெயில்வே பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவை குட்செட் சாலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட செயலாளர் எம்.கோவிந்தன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் தலைவர் கிரன், செயலாளர் விஜய் சண்முகம், நிர்வாகிகள் நாகராஜ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்