வால்பாறை அரசு கல்லூரியில் பேச்சு போட்டி
சிறுபான்மை நலத்துறை சார்பில் வால்பாறை அரசு கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது.;
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில் தலைநிமிரும் தமிழகம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் தமிழ்கனி முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகள் பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.