ஜல்லிபட்டியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் மேலாண்மை பயிற்சி

ஜல்லிபட்டியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் மேலாண்மை பயிற்சி நடந்தது.;

Update:2022-03-17 16:26 IST
சுல்தான்பேட்டை 

மக்காச்சோள படைப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையம், பூச்சியியல் துறை மற்றும் கோவை மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டியில் நடந்்தது.  

நிகழ்ச்சிக்கு வந்து இருந்தவர்களை பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்திற்கு, முன்னிலை வகித்து பூச்சியியல் துறை பேராசிரியர் ஜெயராணி மக்காச்சோள படைப் புழுக்களை  கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நிர்வாக முறைகள் பற்றி விளக்கி கூறினார். வேளாண் துணை இயக்குனர் ஷபி அஹமது, சூலூர் வேளாண் உதவி இயக்குனர் விஜயகல்பனா, 

வேளாண் அலுவலர் புனிதா ஆகியோர் விவசாயிகளுக்கு மக்காச்சோள சாகுபடி, பயிர் பாதுகாப்பு, உரத்தேவை மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து விளக்கமளித்தனர். முடிவில், உதவி பேராசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்