4 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

4 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று;

Update:2022-03-18 22:03 IST
கோவை

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோதவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி ரோடு நகராட்சி பள்ளி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையடிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களில் பல்வேறு கட்ட ஆய்வு செய்யப்பட்டன. அதன் முடிவில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டதற்காக அந்த சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்களை கலெக்டர் சமீரன் வழங்கினார். மேலும் பணியின்போது இறந்த ஒத்தக்கால்மண்டபம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சமையலர் விசாலாட்சி என்பவரது மகள் ஜோதிமணிக்கு ஒக்கிலிபாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தகுதி அடிப்படையில் சமையல் உதவியாளர் பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) கே.ஆர்.ஸ்ரீதர், உதவி கணக்கு அதிகாரி சந்திர பிரியா, துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாசாணம், செவந்தம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்