பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு;

Update:2022-03-20 20:07 IST
பெண்ணிடம் நகை பறிப்பு
போத்தனூர்
கோவையை அடுத்த கோவைபுதூர் ஆல்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பிரமிளா (வயது45). இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.  இவர் தினமும் கடைக்கு தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று பிரமிளா வழக்கம்போல தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

 அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பிரமிளாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். உடனே பிரமிளா செயினை கையால் இருக்கமாக பிடித்துக் கொண்டார்.  

இந்த நிலையில் அவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் செயினை மட்டும் அந்த வாலிபர்கள் பறித்துகொண்டு தப்பி சென்றனர். பிரமிளாவின் கழுத்தில் இருந்த 4½ பவுன் செயின் பறிபோகாமல் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----

மேலும் செய்திகள்