போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை மிரட்டிய தொழிலாளி

போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை மிரட்டிய தொழிலாளி;

Update:2022-03-20 20:32 IST
போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை மிரட்டிய தொழிலாளி
கோவை
கோவையை அடுத்த போத்தனூர் பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி காவியா. சவுக்கத் அலிக்கு போதைப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு சவுக்கத் அலியின் மனைவியை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து காவியா போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அங்கு மதுபோதையில் வந்த சவுக்கத் அலி, தனது மனைவியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி திடீரென்று போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.

மேலும் அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசாருக்கு மிரட்டல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சவுக்கத்அலியின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து விட்டதாக கூறி சவுக்கத் அலி போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்