மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update:2022-03-22 17:09 IST
காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ கணிப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) வாலாஜாபாத் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு, அறிவுத்திறன் வளர்ச்சி, ஆட்டிசம் உள்ளிட்ட 21 வகையான குறைபாடுடைய குழந்தைகள் இருந்தால் நடக்கவிருக்கும் இலவச மருத்துவ கணிப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்