கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா

கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா

Update: 2022-03-23 10:13 GMT
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை அடுத்த மாதம் 6ந் தேதிதொடங்க உள்ளதையொட்டி, கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும்விழா நேற்று நடந்தது.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது . இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதகாலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அரவைக்குத் தேவையான கரும்பு, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுக்காக்களில் உள்ள
 கரும்பு விவசாயிகளிடமிருந்து, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்காரப்பட்டி, பழனி ஆகிய இடங்களில் உள்ள ஆலையின் கோட்டகரும்புஅலுவலகங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி 2021 2022 ம்ஆண்டு அரவைப்பருவத்திற்காக 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவுஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு அரவைப்பருவத்திற்கு 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 2021 2022 ம் ஆண்டு கரும்பு அரவையைத்தொடங்குவதற்கான பணிகள் நடந்துவருகிறது.
இளஞ்சூடு ஏற்றும் விழா
அதன்படி கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று காலைநடந்தது. 

மேலும் செய்திகள்