வடசித்தூர் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பரிசு
வடசித்தூர் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
நெகமம்
கிணத்துக்கடவு ஒன்றியம், வடசித்தூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தேர்வில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், இந்திய ஆயுள் காப்பீட்டு கழக உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.