பெண் டாக்டர் வீட்டில் திருட்டு
கோவையில் பெண் டாக்டர் வீட்டில் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களை திருடினர்.;
கோவை
கோவை ராமநாதபுரம் எஸ்.என்.வி.கார்டனை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சுதா (வயது 55). இவர் தனியார் மருத்துவமனை டீனாக உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுதா வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார்.
அப்போது அவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகள், 6 பித்தளை விளக்குகள் உள்ளிட்டவற்றை திருடி விட்டு சென்றனர்.
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சுதா அங்கு இருந்து வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.