கிணத்துக்கடவில் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கிணத்துக்கடவில் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகைள வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.;

Update:2022-03-25 19:58 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகைள வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள். 

கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு

கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் உள்ளது இந்தக் கோவிலின் பின்புறம் வசிக்கும் நபர் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கோவில் நிலத்தில் கட்டிய சுவரை அகற்றக்கோரி சுண்டக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதேபோல் செட்டியக்காபாளையம் ஊராட்சி பகுதியிலும் 2 இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பொதுமக்கள் வருவாய்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த கோவில் நிலத்தில் அளவீடு செய்தனர். அப்போது ஆக்கிரமித்து சுவர் கட்டியது தெரியவந்தது. 

பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம்

இதையடுத்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் உத்தரவின்பேரில் விநாயகர் கோவில் அருகே ஆக்கிரமித்து கட்டிய சுவரை கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு சுவரை இடித்து அகற்றினர். அதேபோல் செட்டியக்காபாளையத்திலும் 2 இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வக்குமார், விமல்மாதவன், ரோகினி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்