கொடுங்கையூர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரியை கொன்றவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

கொடுங்கையூர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரியை கொன்றவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

Update: 2022-03-27 10:27 GMT
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மார்க்கெட்டில் நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர் கோபி. இவரை தொழில் போட்டி காரணமாக செங்குன்றம் வடகரை வினாயகர் கோவில் தெருவை சேர்ந்த உதயா (வயது 27) மற்றும் கொடுங்கையூர் சேலைவாயல் கலசத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் (30) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் உதயா மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி உள்பட 5 வழக்குகளும், ஆனந்த் மீது ஒரு கொலை முயற்சி உள்பட 4 வழக்குகளும் உள்ளது. இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். 

இதே போன்று வழிபறி வழக்கில் சிக்கிய செங்குன்றம் சோலையம்மன் நகர் முதல் தெருவை சேர்ந்த வாட்டர்வாஷ்குமார் (31), வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைதான பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த கிரண் (41) ஆகிய 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

மேலும் செய்திகள்