காஞ்சீபுரம் பெருமாள் கோவிலில் கருட சேவை

பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.;

Update:2022-03-28 17:53 IST
108 திவ்யதேசத்தில் ஒன்றான பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் போது யதோக்தகாரி பெருமாள் மலர் அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது வழிநெடுக பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்