வால்பாறையில் பஸ்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி

வால்பாறையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பஸ்கள் இயங்காததால் பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்து சென்றனர்.;

Update:2022-03-28 22:56 IST
வால்பாறை

வால்பாறையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பஸ்கள் இயங்காததால் பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்து சென்றனர்.

பஸ்கள் ஓடவில்லை

  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறையிலும் இந்த போராட்டம் நடந்தது.

  இதனால் அங்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதியடைந்தனர். மேலும் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

மாணவர்கள் அவதி

  அதுபோன்று தொழிற்சங்கத்தினர் எல்.பி.எப். தொழிற்சங்க பொதுச்செயலாளர் வினோத்குமார் தலைமையில் வால்பாறை காந்திசிலை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.

  மேலும் எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அங்கிருந்து வால்பாறை பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் வரவில்லை. அத்துடன் அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு நடந்தே வந்தனர். 

அதுபோன்று மாலையில் நடந்தே வீடு திரும்பினார்கள். இதனால் அவர்கள் அவதியடைந்தனர்.   இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வால்பாறையில் மொத்தம் 36 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில்  6 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன என்றனர்.

மேலும் செய்திகள்