கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் சாலையில் பழமையான புங்கை மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது

கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் சாலையில் பழமையான புங்கை மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது;

Update:2022-03-29 19:00 IST

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் சாலையில் பழமையான புங்கை மரம் ஒன்று நின்றது. நேற்று காலை 8 மணியளவில் அந்த மரம் திடீரென்று வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது.

 இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. 

இதை அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து சென்று, அந்த சாலையில் இரும்புத்தடுப்புகள் வைத்து வாகனங்கள் மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுத்தனர். 

இது குறித்த தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகர பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.

 அதன்பிறகு அந்த சாலையில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்றது.

 சாலையில் மரம் விழுந்த போது அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. 

நடுரோட்டில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்