ரத்தினபுரியில் குடிபோதை தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்
ரத்தினபுரியில் குடிபோதை தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்;
கணபதி
ரத்தினபுரியில் குடிபோதை தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தொழிலாளி
கோவை ரத்தினபுரி கண்ணப்பநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது52). கூலித்தொழிலாளி. இவர் பகலில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் மது குடிப்பது வழக்கம். அப்போது அவருக்கு சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
பழனிச்சாமி நேற்று முன்தினம் கண்ணப்பநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு அவர் மது குடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அவருடன் வழக்கமாக மது குடிக்கும் வாலிபர்கள் வந்தனர்.
மது குடித்துக் கொண்டு இருந்த போது போதை தலைக்கு ஏறிய நிலையில் அவர்கள் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர், பழனிச்சாமியை தாக்கி கீழே தள்ளி விட்டார்.
விசாரணை
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பழனிச்சாமி மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.