பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காரமடை காந்தி மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காரமடை காந்தி மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
காரமடை
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காரமடை காந்தி மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நவீன்குமார், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வனவிலங்குகள் பிரச்சினை, 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு, உரவிலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விவசாயத்தில் நஷ்டத்தில் ஏற்படுகிறது.
எனவே விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பால் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தற்போது பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 விலையை அரசு குறைத்தது. ஆனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. மாட்டுத் தீவனங் களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
எனவே பால் உற்பத்தியாளர்களை காப்பாற்ற பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.