மின்சார வயர் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம்
மின்சார வயர் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம் அடைந்தது.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுராந்தகம்-உத்திரமேரூர் சாலை மொறப்பாக்கம் என்ற இடத்திலிருந்து டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு வரப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் அங்கு இருந்த மின்சார வயரில் வைக்கோல் உரசியதில், டிராக்டரில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
இருப்பினும், டிராக்டர் மற்றும் அதில் இருந்த வைக்கோல் முழுமையாக எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.