தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ககளை போலீசார் கைப்பற்றினர்.;

Update:2022-03-29 20:03 IST
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கணேஷ் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது மளிகை கடையில் வினோத் குமார்(வயது 25), என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து மளிகை கடையில் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வினோத்குமாரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்