செல்போன் கடையில் திருட்டு

திருச்செந்தூரில் கடையில் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-03-29 21:49 IST
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே சண்முகபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் மகன் சரவணன் (வயது 31). இவர் திருச்செந்தூர் மேல மாடவீதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 2 புதிய செல்போன்கள் மற்றும் பழுது பார்க்க வந்த 8 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில், திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்