திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம்

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update:2022-03-29 21:50 IST

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் தலைமை தாங்கினார். 

ஒன்றியக்குழு துணை தலைவர் தனம் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு 15-வது மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் சுமார் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 33 பணிகள் தேர்வு செய்யப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. 

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல் கலைச்செல்வி, துரைமுருகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்