விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை;

Update:2022-03-29 21:52 IST
குன்னத்தூர் அருகே திருமணமான  4 மாதத்தில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
புதுப்பெண்
குன்னத்தூர் அருகே கவுத்தாம்பாளையம் கிராமம் குமரிகள்பாளையத்தை சேர்ந்தவர்  காளியப்பன்.  இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள்  ரம்யா வயது 23. பிளஸ்2 படித்துள்ளார்.  இவருக்கும் நம்பியூர் அருகே இருகாலூரை சேர்ந்த ராமமூர்த்தி  28 என்பவருக்கும்  கடந்த  10.11.2021 அன்று  ஈரோடு மாவட்டம்  கூகலூர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.  
 ராமமூர்த்தி தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். ‌திருமணத்திற்கு பின்னர் தம்பதி  இருகாலூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில்  கடந்த 2 நாட்களுக்கு முன் ரம்யா தனது தந்தையை பார்த்து வருகிறேன் என்று கணவரிடம் சொல்லி தனது பெற்றோர் வீடான  குமரிகள்பாளையம் வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில்  நேற்று காலை ரம்யா வீட்டில் எலிக்கு பயன்படுத்தும் எலி பேஸ்டை தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு  குன்னத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா இறந்து விட்டார். இது குறித்து  குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகிறார்கள். ரம்யாவுக்கு  திருமணம் முடிந்து 4மாதம் மட்டுமே ஆவதால் திருப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார். திருமணமான 5 மாதத்தில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்